Homeசெய்திகள்தமிழ்நாடு"கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி.....ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி"- அதிரடி காட்டும் தி.மு.க.!

“கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி…..ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி”- அதிரடி காட்டும் தி.மு.க.!

-

 

"கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி.....ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி"- அதிரடி காட்டும் தி.மு.க.!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தி.மு.க. தலைமை கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த தொகுதிப் பங்கீட்டு குழு பேச்சுவார்த்தையை நடத்தியது.

பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடிக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அன்புமணி

அதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.

"கொ.ம.தே.க.வுக்கு நாமக்கல் தொகுதி.....ஐ.யூ.எம்.எல்.க்கு ராமநாதபுரம் தொகுதி"- அதிரடி காட்டும் தி.மு.க.!

அதேபோல், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில், தி.மு.க. சின்னத்தில் அக்கட்சிப் போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ