Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

-

 

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு!

வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை அடுத்து, தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணை எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை காலை தீர்ப்பளிக்கவுள்ளது.

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல்…தெலுங்கு தேசம்-பவன் கல்யான் இடையே தொகுதி பங்கீடு!

கடந்த 2008- ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவுச் செய்தது. இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரித்து வந்தார். இந்த வழக்கு பிப்ரவரி 13- ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கவுள்ளார்.

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட ஆறு மறு ஆய்வு வழக்குகளில் முழுவதும் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்படவுள்ள வழக்காக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ