பாமக(அன்புமணி), அமமுக என என்.டி.ஏ கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ள ராமதாஸ் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் அவசர நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பாமக நிர்வாகிகள் அவசரமாக தலைபுரம் நோக்கி விரைந்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) பாமக இணைவதற்கான வாய்புகள் குறித்து முக்கியமான விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜனவரி 23ம் தேதி மதுராந்தகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்வதற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாக குழு ஆலோசனை கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
பாமக(அன்புமணி), அமமுக என என்.டி.ஏ கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. அதே நேரம், திமுக, மாற்றுக் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இணைத்து வருகிறது.
இந்த சூழலில், இன்று நடைபெறும் அவசர ஆலோசனை கூட்டத்திலும், அதே விவகாரம் குறித்து மீண்டும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், கூட்டணி குறித்த ராமதாஸின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கீழடியை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி


