தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை முன்னிட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நோயாளிகளுக்கான உணவு திட்டத்தில் மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக குறைவான எரிபொருளில் செய்யப்படும் உணவுகள், அவல், ரொட்டி, பழங்கள், வாழைப்பழம், ஓட்ஸ் போன்றவற்றை நோயாளியின் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிக்கும் அதன் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

எரிவாயு தட்டுப்பாட்டினால் நோயாளிக்கான உணவு திட்டம், மருத்துவமனை, கேண்டின்கள், மாணவர் விடுதிகளின் உணவு விநியோகம் பாதிக்கப்படும் என்பதால் கல்லூரி முதல்வர்கள் முன்கூட்டியே ஆலோசனையின் கூட்டங்களை நடத்தி மாற்று வழிகளை திட்டமிட மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியக இயக்குநரகம் உத்தரவு.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் சென்னை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதிகளில் நிலவும் LPG எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்கப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டினால் நோயாளிகளுக்கான உணவுத் திட்டம், மருத்துவமனை, கேன்டீன்கள் மற்றும் மாணவர் விடுதிகளின் உணவு விநியோகம் பாதிக்கப்படக்கூடும் எனவே அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் உடனடியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, மாற்று வழிகளைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
LPG தட்டுப்பாடு ஏற்பட்டால் விறகு அடுப்புகள், மின்சார அடுப்புகள் அல்லது ஓவன்கள் போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி சமையல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான சூழ்நிலையில் வெளி இடங்களில் உணவு தயாரித்து மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், குறைவான எரிபொருளில் தயாரிக்கக்கூடிய உணவுகளை நோயாளிகளின் உணவுத் திட்டத்தில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவல், ரொட்டி, ஓட்ஸ், பழங்கள், வாழைப்பழம் போன்ற எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விறகு அடுப்புகளை பயன்படுத்தும் போது பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. சமையல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சமையலறையில் போதுமான காற்றோட்டம் மற்றும் புகை வெளியேறும் வசதிகள் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவை அவசியமாக்கப்பட்டுள்ளன. மேலும் பணியாளர்கள் லேசான பருத்தி உடைகளை அணிய வேண்டும் என்றும், சுழற்சி முறையில் போதிய ஓய்வு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், அவற்றின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
