Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!

-

- Advertisement -

வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நம்பகத்தன்மையை முழுமையாகப் பரிசோதிப்பதற்காகவே தற்போது சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகச் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான சமீரன் தெரிவித்துள்ளார்.வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் சூழலில், இப் பணிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் தெளிவான விளக்கமளித்தார்.

we-r-hiring

வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ‘பெல்’ பொறியாளர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு!
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் கூறியதாவது, “இந்திய தேர்தல் ஆணையத்தின் தெளிவான ஆணைக்கிணங்கவே வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கொளத்தூர் தொகுதியைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த மாவட்டங்களிலேயே ஆய்வு செய்யப்பட உள்ளன. சென்னையில் முதன்முறையாக இந்தச் சரிபார்ப்புப் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.”

ஆய்வு முறை மற்றும் வெளிப்படைத்தன்மை
ஆய்வுப் பணிகள் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யப் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து அவர் விளக்குகையில், வேட்பாளர்கள் தாங்களாகவே தேர்வு செய்து அளித்த 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மட்டுமே இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் மற்றும் ‘பெல்’ (BHEL) நிறுவனப் பொறியாளர்கள் நேரில் இருக்க, அவர்களின் முன்னிலையிலேயே ஆய்வுப் பணிகள் வெளிப்படையாகத் தொடங்கப்பட்டு நடைபெறுகின்றன.வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்கவே ஆய்வு: சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் பேட்டி!

முதலில், சம்பந்தப்பட்ட இயந்திரங்களில் ஏற்கனவே பதிவாகி காப்பகத்தில் உள்ள வாக்குகள் முகவர்களுக்குக் காட்டப்படும். அதன் பின்னர், அந்த வாக்குகள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடத்தப்படும்.  இயந்திரங்களின் துல்லியத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்யவே இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1,400 வாக்குகள் வரை மாதிரி பதிவு
முதற்கட்டமாக இரு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. மாதிரி வாக்குப்பதிவின் போது குறைந்தது 500 வாக்குகளும், அதிகபட்சமாக 1,400 வாக்குகளும் செலுத்தப்பட்டு சோதிக்கப்படலாம். வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் இந்த விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக ஆணையர் சமீரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கம்? – வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற தவெக அரசு தீவிர ஆலோசனை!

MUST READ