Homeசெய்திகள்தமிழ்நாடு₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

-

- Advertisement -

₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..
திருச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்..

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்றது. இது தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் 3வது பொதுக்கூட்டம் ஆகும். முன்னதாக கடந்த மாதம் திருவள்ளூரிலும், மதுரையிலும் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசின் விழாவும் இணைந்து நடைபெற இருந்தது. இதில் பங்கேற்பதற்காக கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். மேலும் அவர் பட்டு வேட்டி சட்டையான தமிழர்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.

we-r-hiring

மத்திய அரசின் விழாவில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அரசு திட்டங்களையும், தமிழகத்திற்கு புதிய 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

​முக்கிய அறிவிப்புகள் இதோ:

1. நகர எரிவாயு விநியோகத் திட்டம் (City Gas Distribution – CGD) ​பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மூலம் சுமார் ₹3,680 கோடி மதிப்பில் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கு அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பும், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயு விநியோகம் வழங்கப்படும்.

2. லூப் பிளண்டிங் பிளாண்ட் (Lube Blending Plant) : ​சென்னை மணலியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) 1,490 கோடி மதிப்பில் அமைத்துள்ள
​ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய லூப் பிளண்டிங் பிளாண்ட்-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இந்தியாவின் மசகு எண்ணெய் (Lubricants) உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.

​3. ரயில்வே: இரண்டு ‘அம்ரித் பாரத்’ விரைவு இரயில்கள் உள்பட ஐந்து புதிய இரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி நாகர்கோவில் – சார்லபள்ளி, போத்தனூர் – தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், ராமேஸ்வரம் – மங்களூரு சென்ட்ரல் , திருநெல்வேலி – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மயிலாடுதுறை – திருவாரூ – காரைக்குடி பயணிகள் ரெயில் சேவைகளையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

​4. சாலைகள்: பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் திறந்து வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலை எண் 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

MUST READ