spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

5 ஆண்டு கால உழைப்பு, வளர்ச்சியை பார்த்து அடுத்த 5 ஆண்டுக்கு திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளாா்.திராவிட மாடல் தொடர மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரை ஆற்றினாா் அதில், ”ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையும் இருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு அடைந்த சாதனைகளை பட்டியலிட்டார்.

we-r-hiring

அதிமுக ஆட்சியில் அனைத்து தறைகளும் பன்னடைவை சந்தித்து மோசமான நிலையை அடைந்திருந்தது. இடியாப்ப சிக்கல் என்ற சூழலில் தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றதாகவும் அவர் கூறினார்.

5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிடடேன் என முதலமைச்சர் தெரிவித்தாா்.

திராவிட மாடல் அரசின் சாதனையால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பிற மாநிலங்கள் தலை உயர்த்தி பார்ப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் என்னுடைய முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பயணதிட்டம்தான் எனக் குறிப்பட்ட அவர், விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ.60,000 வரை சேமித்துள்ளனர். அதேபோன்று மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.29,000 வழங்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை எங்கள் அண்ணன் சீர் வழங்குகிறார் என்று கூறுவதாக பெருமிதம் கொண்டார்.

காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகள் சத்தான உணவை பெற்று வருகின்றனர்.  கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் கழுக்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டதம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 19 தோழி விடுதிகள்,  இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 5 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என பட்டியளிட்டாா்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.  மேலும் இந்திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளாா்.

கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு கொருளாதாரத்தில் இரட்டை வளர்ச்சி பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே இதற்குச் சான்று எனவும் தெரிவித்தார்.

ரூ.12 லட்சம் கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு 65க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது. மின்னணு சாதனங்கள் எற்றுமதியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திமிழ்நாடு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா.வின் விருதை பெற்றள்ளது என்றும் குறிப்பிட்டாா்.

தமிழ்நாட்டு நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால். அவர் வகிக்கும் பதவியை அவரே அவமானப்படுத்துகிறாா். கடந்த 3 ஆண்டுகளாக சட்டப்பேரவையில் முதலில் நாட்டுப்பண் பாடவில்லை என்பதையே குற்றச்சாட்டாக கூறி வெளியேறுகிறார் எனக் குற்றம்சாட்டினாா்.

ஆளுநரின் பார்வை பழுதுபட்ட பார்வையாக உள்ளது. சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும்போது நாட்டுப்பண் பாடுவதுதான் வழக்கம்.. தேச பக்கி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் திமுக இல்லை, நாட்டின் மீதும் நாட்டுப்பண் மீதும் அளவற்ற அன்பைக் கொண்டவர்கள் நாங்கள்தான் என்றும் முதலமைச்சர் கூறினார்.

சோதனைகள் எனக்கு புதிதல்ல, சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். எனக் கூறிய முதலமைச்சர், திமுக தொண்டர்களும் கூட்டணிக் கட்சிகளும் தான் தன்னை இயக்கும் சக்தி என தெரிவித்தார்.

இதுவரை ரூ.8000 கோடி மதிப்பிலான கோயில்செத்துக்கள் மீட்டக்கப்பட்டுள்ளன. ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் உள்பட 1.8 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க்கப்பட உள்ளதாக அறிவித்தாா்.

தமிழ்நாடு அனைத்தும் நிலையிலும் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது.  வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் தொகை 1.4% தான், இதையும் நீக்க தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

மேலும், சத்துணவு ஊழியர்கள் கிராம் ஊராட்சி செயலாளர்களக்கான ஓய்வூதியம் உயர்வு வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளடர்களுக்கு ஓய்வூதியம் ரூ.2,000லிருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படவுள்ளது என்றும் அறிவித்தாா்.

சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியர்கள் உயிரிழந்தால் இறுதிச்சடங்குக்கு ரூ.20,000 வழங்கப்படவுள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அவர்களுக்கான சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.

தமிழ்நாட்டின் கடைகோடி மனிதருக்கும் எல்லா திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகால சாதனைகளை பார்த்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சி, நாங்களே மிஞ்சும் அளவுக்கு சாதனைகளை படைக்கும் என நம்பிக்கையுடன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டப்பேரவைியல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்… தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!!

MUST READ