இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 7 மீனவா்கள் இலங்கை கடற்படையினால் இன்று கைது செய்யப்பட்டனா். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் விவகாரம் தொடா்பாக ஒன்றிய அமைச்சா் ஜெயசங்கருக்கு முதலமைச்சா் கடிதம் எழுதியுள்ளாா். இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கை கடற்படையால் தற்போது வரை தமிழ்நாட்டிலுள்ள 90 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மீனவா்களின் 254 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!


