Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் நாளை திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நாளை சென்னையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக்கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தி.மு.க., தி.க. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க., ஐ.யூ.எம்.எல், த.வா.க, கொ.ம.தே.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டாக பங்கற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

dharmendra pradhan

இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய மோடி அரசு எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுவதாகவும்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டுகிறார் என்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம்! என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம்! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ