Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்- கே.என்.நேரு

திமுகவின் வெற்றிக்காக பாடுபடுபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்- கே.என்.நேரு

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபட வேண்டும் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Image
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நேர்காணலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

we-r-hiring

பின்னர் விழாவில் உரையாற்றிய திமுக முதன்மை செயலாளரும் அமைச்சர் கே.என்.நேரு, “திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் சிறப்பானவர்களை தேர்வு செய்ய வேண்டும். அதே நேரத்தில் திமுகவின் வெற்றிக்காக பாடுபடுபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டுத்துறை பெரிய துறையாக மாற்றம் பெற்றுள்ளது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் பதவி பெறுபவர்கள் திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்” என்றார்.

kn nehru assembly

பின்னர் உரையாற்றிய திமுக பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, “எந்த துறை வழங்கினாலும் சிறப்பாக செயல்படுபவர் தயாநிதி மாறன்.முத்தமிழறிஞர் கலைஞர், ஒன்றிய அமைச்சராக தயாநிதி மாறனுக்கு பதவி வழங்கிய போது சிறப்பாக செயல்பட்டு பல சாதனை படைத்தவர் தயாநிதி மாறன் என பாராட்டு தெரிவித்தார். தோஹா மாநாட்டில் முரசொலி மாறன் ஆற்றிய உரையால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் பாராட்டை பெற்றவர்.

எதிர்கருத்து கொண்ட கட்சியாக இருந்தாலும் வாஜ்பாய் சிறந்த தலைவர் என பாராட்டுவதில் தவறில்லை. தயாநிதி மாறன் விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக நியமிக்கட்டுள்ளதால் சிறப்பாக செயல்படுவார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபட வேண்டும். இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கே திமுக நன்றி தெரிவிக்கிறது” என பேசினார்.

MUST READ