spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமணியம்மையார் குறித்த பேச்சு - வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

மணியம்மையார் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

-

- Advertisement -

மணியம்மையார் குறித்த பேச்சு – வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன்

செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “17.9.2023 அன்று வேலூரில் நடைபெற்ற கழகத்தின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா மாநாட்டில் நான் பேசும் போது… “மணியம்மையாரை, பெரியார் கட்சி பணிக்காக அழைத்துக் கொண்டு போனார்” என்பதற்கு பலில் “கூட்டிக் கொண்டு போனார்” என பேசிவிட்டேன். இரண்டுக்கும் மலைத்த வேறுபாடு இருப்பதை நான் உணர்கிறேன்.

என்னுடைய இந்த பேச்சு தமிழினத் தலைவர் அண்ணன் வீரமணி அவர்களுக்கும், தந்தை பெரியார் மற்றும் மணியம்மையார் மீது அடங்கா பற்று கொண்ட தோழர்களுக்கும் வருத்தம் தந்திருப்பதாக எனக்கு செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் என் பேச்சில் அந்தக் கூட்டத்தில் உபயோகப்படுத்தியதற்காக நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

MUST READ