spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பேரணி

கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக் ஆட்சி மீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில் சின்னமலை பகுதியிலிருந்து அதிமுகவினர் பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணி காரணமாக ஆலந்தூர் தொடங்கி சைதாபேட்டை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்பட்டு, வேலைக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

we-r-hiring

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

MUST READ