spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமேகமலை வனத்திற்குள் நுழைந்தது அரிசிக்கொம்பன் யானை!

மேகமலை வனத்திற்குள் நுழைந்தது அரிசிக்கொம்பன் யானை!

-

- Advertisement -

 

மேகமலை வனத்திற்குள் நுழைந்தது அரிசிக்கொம்பன் யானை!
File Photo

கேரளா மாநிலத்தில் இதுவரை 10 பேரை மிதித்துக் கொன்ற ஆட்கொல்லி அரிசிக்கொம்பன் யானை, தற்போது தமிழ்நாட்டு பகுதியான தேனி மாவட்டம், மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

we-r-hiring

அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னகாலால் பகுதியில் சுற்றித்திரிந்த அரிசிக்கொம்பன் யானை, இதுவரை 10 பேரை மிதித்துக் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் 30- ஆம் தேதி அன்று மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியோடு பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பக்க வனப்பகுதியில் விடப்பட்டது.

கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, கண்காணிப்பட்டு வரும் இந்த யானை தற்போது மேகமலை புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்துள்ளது. எனவே, இரவங்கலாறுக்கும், மணலாருக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

யானையை சின்னமனூர் மற்றும் கம்பம் வனச்சரகர்கள் தலைமையில் 24 மணி நேரமும் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

MUST READ