spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!

அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!

-

- Advertisement -

 

அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதம் உயர்வு!
US Dollar

அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ளது.

we-r-hiring

சரத்பாபு உடல்நிலை – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 72 டாலரில் வர்த்தகமானது. பணவீக்கதைக் கட்டுப்படுத்த அமெரிக்க மைய வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் உயர்த்தியது. சர்வதேச பொருளாதார மந்தநிலை போன்றவையே கச்சா எண்ணெய் விலை குறைய காரணமாக கூறப்படுகிறது.

கடன்களுக்கான வட்டி விகிதம் 5% முதல் 5.25% ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க மைய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 14 மாதங்களில் 10ஆவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை அமெரிக்க மைய வங்கி உயர்த்தியுள்ளது.

முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

முன்னதாக, கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டதால், அந்நாட்டில் மூன்று வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது என்பதும், அமெரிக்காவில் 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ