spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக ஆட்சியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது - எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

-

- Advertisement -
எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

திமுக ஆட்சியில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்படி பழனிசாமி வெளியிட்டுள்ள அரிக்கையில், வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.

we-r-hiring

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது. சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ