தமிழ்நாட்டில் கூட்டணி தேவை என்ற அளவில் இரண்டு திராவிட கட்சிகளும் பலவீனமாக உள்ளன. கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவிற்கு பலவீனப்படவில்லை. இரு கட்சிகளும் மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக, பெரிய வாக்கு வங்கி கட்சிகளாக இருக்கும் உண்மையை மறுக்க முடியாது என்று பொன்னேரியில் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், “50 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், ஆட்சியில் பங்கு கொடுக்காதது கூட்டணி கட்சிகளின் பலவீனமா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தேசிய கட்சிகள் பலவீனமடையும் மாநிலங்களில் அவ்வப்போது கூட்டணி ஆட்சி உருவாகி உள்ளது எனவும், காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக ஜனதா கட்சி உருவான காலத்தில் டெல்லியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது எனவும், ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட கட்சியோ பலவீனமடையும் போது தான் கூட்டணி ஆட்சி முறை நடைமுறைக்கு வரும் என்றார்.
1967க்கு பிறகு திமுக, அதிமுக இருதுருவங்களாக அரசியல் செய்து வருகின்றன எனவும், இன்று வரை இரு கட்சிகளும் மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக, பெரிய வாக்கு வங்கி கட்சிகளாக இருக்கும் உண்மையை மறுக்க முடியாது என்றார். இந்த இருகட்சிகளில் ஒன்று எப்போது பலவீனம் அடைகிறதோ அப்போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாகும் எனவும், கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு தற்போது எழுந்துள்ளதால் ஒரு கட்சி பலவீனம் அடைந்துள்ளதை குறிக்கிறது எனவும், இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ எனவும், அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயார் என்ற தோற்றம் உருவாகி உள்ளதாகவும், இந்த தேர்தலில் இந்த சூழல் உருவானதாக தெரியவில்லை எனவும், 2016தேர்தலில் கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தது விசிக என்றார்.

தேர்தல் நேரத்தில் காவல்துறையால் யாரேனும் கொல்லப்படுவது குறித்த செய்தியாளர் கேள்விக்கு, தமிழ்நாடு மட்டுமின்றி பரவலாக பல மாநிலங்களில் காவல்துறையினரின் அத்துமீறல்களை பார்த்து வருவதாகவும், சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ ஒவ்வொரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்கின்றன எனவும், பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட வன்முறைகள் வெறுப்பு அரசியலின் மூலம் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் மதத்தின் பெயராலான வன்முறைகள், வெறுப்பு அரசியலின் ஊடாக வெடிக்கவில்லை எனவும், சாதிய கொடுமைகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் அவ்வப்போது தலை தூக்குவதாகவும், இவற்றை கட்டுப்படுத்தி முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும், ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு தனி கவனம் செலுத்திட வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு இரண்டு திராவிட கட்சிகளும் பலவீனப்படவில்லை எனவும், கூட்டணி தேவை என்ற அளவில் பலவீனமாக இருப்பதாகவும், கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவிற்கு பலவீனப்படவில்லை என்றாா்.
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் விநியோகம்…