தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் எனும் முழக்கத்தை முன்னெடுத்து, எடப்பாடி சுற்றுப் பயணம் மேற்க்கொண்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில், ”தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்கிற முழக்கத்தை முன் வைத்து எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். யாரிடமிருந்து தமிழகத்தை மீட்க போகிறார் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்த வேண்டும். அவர் பாஜக என்கிற எலி பொறிக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அதிமுக தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாஜகவிடமிருந்தும் அதிமுக தொண்டர்களிடமிருந்தும் தன்னை காத்துக் கொள்ள எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதிமுகவில் அன்வர் ராஜா மட்டுமல்ல பல தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை விரும்பவில்லை. சிலர் வெளிப்படையாக அதை கூறுகிறார்கள் சிலர் வெளிப்படையாக கூறவில்லை. அதிமுகவை கபளிகரம் செய்து தங்களை பலப்படுத்திக் கொள்ளத்தான் பாஜக முயன்று வருகிறது.
திராவிட கட்சிகள் இரண்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாகவே உள்ளன-திருமாளவளவன் பேட்டி
