உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட கொடுஞ்செயலுக்கு பாஜகவினர் உறுதுணையாகவும் உள்ளுக்குள் மகிழ்கிறார்கள். வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளாா்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசியதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பாக சென்னை உயர்நீதிமன்ற மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்டார். மேலும் பல வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாஹ் பேசுகையில், நீதிமன்ற அறைக்குள் வைத்தே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசியதற்கு இந்த ஆர்பாட்டம் நடந்தது. அந்த நபரை காவலர்கள் அப்புறப்படுத்தி உள்ளார்கள். இதற்கு முன்பு இப்படி நடத்ததே இல்லை மோடி ஆட்சி காலத்தில் தான் இப்படி நடக்கிறது.
செருப்பு வீசிய நபரை வீட்டுக்கு செல்ல அனுமதித்தது மட்டுமல்ல அவனது காலணியை மீண்டும் அவனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அது போல் தான் பாஜக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தான் இரண்டாவது தலீத் தலைமை நீதிபதியாக உள்ளார். முதல் பௌத்த மதம் சேர்ந்த தலைமை நீதிபதியாக உள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற அறையில் இருந்த நிர்வாக பிரிவினர் கண்ணியத்தை இழந்துவிட்டனர். அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை எப்போது போல் அவையை ஒத்திவைக்காமல் தீர்ப்புகளை வழங்கி உள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் புகார் கொடுக்கவில்லை என்றாலும் வன்கொடுமை தடை சட்டம் கீழ் அவனை கைது செய்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
உயர்சாதி நீதியரசருக்கு இது போல் நடத்து இருந்தால் பாஜகவினர் அவர்களை தப்பவிட்டு இருப்பார்களா எனவும் மிகவும் தாமதமாக தான் பிரதமர் மோடி அறிக்கை கொடுத்துள்ளார். இந்த கொடுஞ்செயலுக்கு பாஜகவினர் உறுதுணையாகவும், உள்ளுக்குள் மகிழ்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாள்களை சந்தித்த ஜவாஹிருல்லாஹ், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறையில் ராகேஷ் கிஷோர் என்ற நபர் தலைமை நீதிபதி மீது செருப்பு வீசியது கண்டிக்கத்க்கது. இந்த விஷயத்தை பெரிபடுத்த வேண்டாம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபரை தண்டிக்க வேண்டும். வேண்டுமென்றே சங்கபரிவார் அவதூறு பரப்புகிறார்கள் என ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்