spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு வழிபாடு!

எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு வழிபாடு!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு வழிபாடு!

we-r-hiring

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை – இல்லத்தரசிகள் கவலை!

பின்னர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மனமுருகி வேண்டி, அக்னி சட்டியை அக்னி குண்டத்தில் இறக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, குடும்பத்துடன் கோயிலுக்குள் சென்ற நடிகர் கஞ்சா கருப்பு, சமயபுரத்து மாரியம்மனை தரிசனம் செய்தார்.

“தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்”- தலைமை காஜி அறிவிப்பு!

அ.தி.மு.க.வில் உள்ள நடிகர் கஞ்சா கருப்பு, அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற வேண்டி தொடர்ச்சியாக, பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டியை ஏந்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ