Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் சேகர்பாபு அறநிலையத் துறையை வேவு பார்க்கிறார்: அமைச்சர் ரமேஷ் பகிரங்க குற்றச்சாட்டு!

அமைச்சர் சேகர்பாபு அறநிலையத் துறையை வேவு பார்க்கிறார்: அமைச்சர் ரமேஷ் பகிரங்க குற்றச்சாட்டு!

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறையை வேவு பார்த்து வருவதாகவும், பயத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்து வருவதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:

  • சட்டப்பேரவை நடைமுறை: “சட்டப்பேரவையில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு, அனைவரது குரல்களும் ஒலிக்கத் தக்க அவகாசம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சிலர் பேரவையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது சபையின் மாண்புக்கு உகந்தது அல்ல.”

  • தவெக குறித்து: “மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த இளைஞர்களை முதல்வர் சரியாக நடத்துவார்; அவர்களுக்குச் சரியான இடம் அளிப்பார்.”

  • சேகர்பாபு மீது விமர்சனம்: “முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத் துறையை வேவு பார்த்து வருகிறார். அவருக்கு இத்துறையில் இருந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர். பயத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்கிறார்; தவறுகள் நடந்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”

கோயில் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடுகள்

  • அன்பில் மாரியம்மன் கோயில் தங்குமிடம்: “அன்பில் மாரியம்மன் கோயிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்பு வந்து தங்குவதற்காகவே மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால் திமுகவினர் நோய் பாதிப்பு உள்ளவர்களை அங்கு தங்க வைப்பதாக அவதூறு பரப்புகின்றனர்.”

  • தேவையற்ற திட்டங்கள் நிறுத்தம்: “கடந்த ஆட்சியில் பக்தர்கள் பயன்பாட்டிற்குத் தேவையற்ற திட்டங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. 100 நாளில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு சினிமா கிடையாது.”

  • செல்போன் தடை: “தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலைப் போலத் தமிழ்நாட்டிலும் கோயில்களுக்கு வெளியே செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கும் மனநிலை பக்தர்களுக்கு வர வேண்டும்” என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி முகமைக்கு IFS அதிகாரிகள் நியமனம்: முடிவைத் திரும்பப் பெற பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்!

MUST READ