
நேதாஜியை தேசத்தந்தை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று (ஜன.23) காலை 11.00 மணிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். அதேபோல், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “காந்தியின் சுதந்தரப் போராட்டம் பலன் அளிக்கவில்லை; நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி, கடந்த 1947- ஆம் ஆண்டு நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லீ கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆளுநரின் சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சு, அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.