spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

-

- Advertisement -

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன்

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image

2021 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.16 கோடி மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேன் மீது புகார் எழுந்தது. பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக்கூறி ஏமாற்றியதாக பாலாஜி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டுள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக ரவீந்தர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நம்பிக்கை ஆவணங்கள்‌ மோசடி பிரிவில்‌ (15101) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

இந்நிலையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ரவீந்திரனின் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது, ஆனால் இவை அனைத்தும் இந்த வழக்கு தொடர்புடையதா? என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

MUST READ