spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைப்பாளருமாகிய திரு. ராமச்சந்திரன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் சார்பில் முதலமைச்சராக இருந்து, புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்திச் சாதனை படைத்தவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ