சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கடந்த திங்கள் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்தது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது. புதன் கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதேபோல் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது.