Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

-

- Advertisement -

திருச்சியிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிபரப்பான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அரசுப் பேருந்தின் டிஜிட்டல் போர்டில் திமுகவை விமர்சிக்கும் வாசகங்கள்! 5 ஊழியர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்!

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் என மொத்தம் 5 பேர் ஒரு வார காலத்திற்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

we-r-hiring

டிஜிட்டல் போர்டில் சர்ச்சைக்குரிய வாசகங்கள்

கடந்த 13ஆம் தேதி திருச்சியிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற அரசுப் பேருந்தின் டிஜிட்டல் வழித்தடப் பலகையில், வழக்கமாகக் காணப்படும் வழித்தட விவரங்களுக்குப் பதிலாக, திமுகவை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் ஒளிபரப்பானதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, “திமுக ஒரு தீயசக்தி”, “எங்க உங்க அப்பாவைக் காணோம்” போன்ற வாசகங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் அரசியல் விமர்சனங்கள் இடம்பெற்றது பயணிகள் மத்தியில் கவனத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அதிகாரிகள் விசாரணை

பேருந்தின் டிஜிட்டல் பலகையில் வாசகங்களைப் பதிவு செய்ய மென்பொருள் அல்லது USB பென் டிரைவ் மூலமாக மட்டுமே தகவல்களை உள்ளீடு செய்ய முடியும் என்பதால், இந்தச் சம்பவம் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அந்த வாசகங்களைப் பதிவேற்றவில்லை என்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பணியின்போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற அடிப்படையில், குறிப்பிட்ட நாட்களில் அந்தப் பேருந்தை இயக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

5 பேருக்கு ஒரு வாரம் பணியிடைநீக்கம்

இதையடுத்து, ஓட்டுநர்கள் சித்திரை செல்வன், பரந்தாமன் மற்றும் நடத்துநர்கள் செந்தாமரைக் கண்ணன், வெங்கடேசன், மணிகண்டன் ஆகிய 5 பேரும் ஒரு வார காலத்திற்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு விழுப்புரம் போக்குவரத்துக் கழகக் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் பலகையில் அரசியல் விமர்சன வாசகங்கள் இடம்பெற்ற சம்பவம் போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பெருமையை நிலைநாட்டிய மக்கள் குடியரசுத் தலைவர்– அப்துல் கலாமுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

MUST READ