spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை'- விரிவான தகவல்!

‘அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை’- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

'அரசு கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை'- விரிவான தகவல்!
File Photo

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

we-r-hiring

மைதானத்தில் அருகருகே பயிற்சி மேற்கொண்ட தோனி, ரோஹித் சர்மா! (வைரலாகும் வீடியோ)

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre- ‘AFC’) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் வரும் மே 8- ஆம் தேதி முதல் மே 19- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்றவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூபாய் 2 செலுத்த வேண்டும்.

ராகவா லாரன்சுக்கு இணையாக உதவி செய்யும் விஷ்ணு விஷால்… குவியும் பாராட்டுக்கள்!

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate Of Collegiate Education, Chennai- 15” என்ற பெயரில் மே 5 அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்கள் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ