Homeசெய்திகள்தமிழ்நாடுஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!

-

 

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் தமிழக அரசு முன் வைத்த கோரிக்கைகள்!
Photo: Minister Thangam Thennarasu

ஜி.எஸ்.டி. முறைகேடுகளை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு சேர்த்ததற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், தமிழக நிதித்துறை, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று தமிழக அரசு சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதற்கான பரிந்துரைகள், தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டத்திற்கு இணங்க இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஜி.எஸ்.டி.முறைகேடுகளைப் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சிறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறியது.

“புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட வேண்டிய மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மாநில அமர்வுகளுக்கு நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களை மாநில அளவிலான குழுவைத் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

MUST READ