spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

-

- Advertisement -

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார இடங்களில் காலை முதலே விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் நண்பகல் தொடங்கி சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பொன்னேரியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

we-r-hiring

தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

MUST READ