
கனமழை காரணமாக, வேலூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 5- ஆம் வகுப்புகளுக்கு இன்று (செப்.21) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், 6 முதல் 12- ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒரு உறுப்பினர் மட்டும் எதிர்ப்பு…..மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது என்றே கூறலாம்.