Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி

தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் – பிரதமர் மோடி

-

தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் – பிரதமர் மோடி.

தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் ராமகிருஷ்ணா மடத்தின் 125- வது ஆண்டு விழா நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி

அப்போது அவர், தமிழ்நாடு மக்களையும், சென்னையையும் நேசிக்கிறேன். தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் மதிப்பும், மரியாதையும் இருந்து வருவதாக கூறினார்.

மேலும், அமெரிக்காவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் சென்னை வந்தபோது அவருக்கு அப்போது மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை காணக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது என்று பெருமிதமடைந்தார்.

தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி

மேற்குவங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விவேகானந்தர் தமிழ்நாடு வந்தபோது கதாநாயகனைப் போல் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் விவேகானந்தரின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

காசி தமிழ்ச்சங்கமம் வெற்றி அடைந்தது. அதேபோல், குஜராத்தில் தமிழ் சங்கமம் நடக்கப் போகிறது என்றார். மேலும், கன்னியாகுமரியில் பாறை மீது அமர்ந்து தியானம் செய்த போது தான் விவேகானந்தர் தனது வாழ்வின் நோக்கத்தை உணர்ந்தார். விவேகானந்தர் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய இந்தியாவை நினைத்து பெருமைப்படுவார் என பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

அதேபோல், “புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் பேசினார்.பிறருக்கு உதவி செய்து வாழ்வதால் கிடைக்கும் நற்பெயரை போல் வேறு எதிலும் நற்பெயர் கிடைக்காது என அவர் கூறினார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய மக்களிடம் ஒற்றுமை காணப்பட்டது. அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும் என்றார் மோடி. இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று பல்வேறு நிபுணர்களும் கூறியதாகதெரிவித்தார்.

சர்வதேச நாடுகளை நம்பிக்கையுடனும், மரியாதைையுடனும் எதிர் கொண்டு வருகிறோம். குஜராத் சௌராஷ்ட்ராவில் தமிழ்ச்சங்கமம் நடக்கப்போவது மகிழ்ச்சியை தருகிறது எனக் கூறினார்.

தமிழ் கலாச்சாரத்தை விரும்புகிறேன் - பிரதமர் மோடி

மேலும், பெண்கள் ஒவ்வொரு நாளும் தடைகளைத் தகர்த்து புதிய வரலாறு படைத்து வருகின்றனர் என பிரதமர் கூறினார். தொழில் முனைவோராக இருந்தாலும் விளையாட்டு, ராணுவ, உயர்கல்வி என அனைத்திலும் பெண்கள் சாதனை படைக்கின்றனர். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பலர் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

MUST READ