spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு!

ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்வு!

-

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிகிறது. 2 முறை ஐ.சி.சி. தலைவராக தேர்வுசெய்யப்பட்ட பார்கிளே, மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்துவிட்டார். இதனால் புதிய தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஐசிசி அறிவித்தது. இதனை அடுத்து, அந்த பதவிக்கு பி.சி.சி.ஐ. செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா விண்ணப்பித்திருந்தார்.

we-r-hiring
கிரிக்கெட் விதிகளில் மாற்றம்- ஐ.சி.சி. அறிவிப்பு!
File Photo

இந்நிலையில் ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை ஐ.சி.சி. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அவரது பதவிக்காலம் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இளம் வயதில் ஐ.சி.சி.-ன் தலைவராக தேர்வு செய்யப்பட்ட 5வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார்.

MUST READ