மாமல்லபுரம் அருகே விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உயிரிழந்ததால் வாகனத்தை ஓட்டிய இளைஞர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் பூஞ்சேரியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த சபரீனா என்ற 20 வயது பெண் பலத்த காயம் அடைந்தார். வாகனத்தை ஓட்டி வந்த யோகேவரன் லேசான காயங்களுடன் தப்பினார்.
இதனை அடுத்து, காயமடைந்த சபரீனாவை போலிசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த யோகேஸ்வரன் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற புதுச்சேரி அரசு பேருந்து முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் இருவரும் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.