எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.
ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு பின் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்து காணப்பட்டதாலும், தற்போது குளிா்காலம் தொடங்கிய காரணத்தினாலும், கடும் பனிபொழிவினாலும் மற்றும் விளைச்சல் அதிகரிப்பாலும் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும் ஒரு கிலோ முதல் தர எலுமிச்சை ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது வெளி மாநில எலுமிச்சை பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூா் வியாபாாிகள் நஷ்டத்திற்கு உள்ளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால், பராமரிப்புச் செலவு கூட கிடைக்காத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எலுமிச்சை பழங்களின் விலை சாிவால் வியாபாாிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் தவெக 100% உறுதியாக இருக்கும் – விஜய்



