- Advertisement -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. மேலும், உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம் ஆகிய 3 புதிய காவல் உட்கோட்டங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகளை முதலியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.


