Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

-

செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசியின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய மின்வாரியம் தொடர்புடைய சில நிறுவனங்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். தேனாம்பேட்டை வெங்கடரத்தினம் தெருவில் உள்ள காசியின் வீட்டில் சோதனை நடந்துவருகிறது. TANGEDCO-விற்கு ஓப்பந்தம் அளித்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெற்றுவருவதாக தெரிகிறது. சோதனை முடிவில் தான் மொத்தம் எவ்வளவு ரூபாய் வரி ஏய்ப்பு இருக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்னை ராதா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெர்மல் பவர் பிளான்ட், துறைமுகங்களில் நிலக்கரி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் பல்வேறு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வரி எய்ப்பு புகாரில் பேரில் சென்னை ராதா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஜாபர்கான்பேட்டை புரசைவாக்கம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், தேனாம்பேட்டை படூர் , வெள்ளி வாயல், மேட்டூர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ