spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்'- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர்...

‘இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்’- வீடியோ வைரலான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

-

- Advertisement -

 

udhayanidhi stalin tn assembly

we-r-hiring

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது, ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியின் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியில் திரும்பிய போது, அங்கிருந்த ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என தொடர்ச்சியாக முழக்கமிட்டனர். இது தொடர்பான வீடியோ, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விரும்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எதிரான அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார். விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த சக்தியாகவும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!

விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ