Homeசெய்திகள்தமிழ்நாடு"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

-

 

"இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி!

“இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை; இவர்களா பிரதமரைத் தேர்வு செய்வர்?” என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

கோவை காரமடையில் நடந்த அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி; 30 ஆண்டுகள் தமிழ் மண்ணில் சிறந்த ஆட்சியை அ.தி.மு.க. தந்தது. நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸும், தி.மு.க.வும் தான்; பொய் பேசி நீட்டை எதிர்க்கின்றனர்.

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

மூன்று ஆண்டுகால தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. தி.மு.க.வில் குடும்ப அரசியல் நடக்கிறது; அரசியலில் உதயநிதி என்ன சாதித்துவிட்டார்? தி.மு.க.வின் பொய்யும், புரட்டும் தேர்தலில் எடுபடாது. மக்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒற்றுமை இல்லை; இவர்களா பிரதமரை தேர்வு செய்வர்? மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், இடதுசாரிகள் மாநிலத்திற்கு மாநிலம் தனியாகப் போட்டியிடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ