Homeசெய்திகள்தமிழ்நாடுமாமல்லபுரம் அருகே களைகட்டிய சர்வதேச காத்தாடி திருவிழா

மாமல்லபுரம் அருகே களைகட்டிய சர்வதேச காத்தாடி திருவிழா

-

செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை கடற்கரை பகுதியில் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து 3வது சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் நேற்று தொடங்கியது. இந்த காத்தாடி திருவிழாவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

வியாழன் அன்று தொடங்கிய இந்த சர்வதேச காத்தாடி திருவிழா வரும் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் தாய்லாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். காத்தாடி திருவிழாவின் 2ஆம் நாளான இன்று திருவிடந்தை கடற்கரை ப் பகுதியில் சுறாமீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு, புலி உள்பட பல்வேறு விலங்குகளின் உருவங்களில் 250 ராட்சத காத்தாடிகள் வானில் பறக்கவிடப்பட்டன.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் வானில் சிறகடித்து பறந்த ராட்சத காத்தாடிகளை தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்

MUST READ