- Advertisement -

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.

2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்க முடிவு- கே.எஸ்.அழகிரி
அதன்படி, தமிழக காவல்துறைத் தலைமையிடக் கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் இ.கா.ப. நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், உளவுத்துறை ஐ.ஜி.யாக உள்ள செந்தில் வேலன் இ.கா.ப., உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி. பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆவடி காவல் ஆணையர் அருண் இ.கா.ப., சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.