Homeசெய்திகள்தமிழ்நாடு'இஸ்லாமிய கைதிகள் விடுதலை'- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

‘இஸ்லாமிய கைதிகள் விடுதலை’- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!

-

 

'இஸ்லாமிய கைதிகள் விடுதலை'- முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் காரசார வாதம்!
Photo: TN Govt

நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலைத் தொடர்பாக, அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், புரட்சிப் பாரதம் உள்ளிட்டக் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

‘பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்’- வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இஸ்லாமிய கைதிகள் விடுதலை தீர்மானம் மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக ஆராய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

264 பேர் கைதிகள் மட்டுமே இக்குழுவால் முன் விடுதலைக்கு பரிந்துரைச் செய்யப்பட்டது. ஆளுநர் ஒப்புதலுக்கு பின் அனைத்து சிறைவாசிகளுக்கு விடுதலைச் செய்யப்படுவர். இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுவிக்கப்படவில்லை என்பது தவறானது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, இஸ்லாமிய கைதிகளை கைதிகளை விடுவிக்காதது ஏன்? அ.தி.மு.க. உண்மையான அக்கறை இருந்தால் ஆளுநரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கலாமே? இஸ்லாமிய கைதிகள் மீது அ.தி.மு.க.வின் திடீர் பாசத்திற்கு என்ன காரணம்?” என்று கேள்வி எழுப்பினார்.

“ரூபாய் 50,000- க்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் ஏற்பட்ட நிலையில், பேச வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

MUST READ