spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒரே ஒரு எஸ்.எம்.எஸ்…வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க இது போதும்!

ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்…வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க இது போதும்!

-

- Advertisement -

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள எந்த அலுவலகமும் அலைய வேண்டாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கியுள்ள பிரத்யேக வசதியின் மூலம், உங்கள் மொபைல் போனிலிருந்தே ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பன்பற்றி சரிபார்த்துக்கொள்ளலாம்.   ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்…வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க இது போதும்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (SIR) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலப்பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் விவரங்களைச் சேகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர்.

we-r-hiring

97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கம்!
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, முறையான ஆவணங்கள் இல்லாதது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் சுமார் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், வரும் தேர்தல்களில் வாக்களிக்க விரும்பும் ஒவ்வொரு குடிமகனும், தமது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது மிகவும் அவசியம் ஆகிறது.

அலுவலகம் செல்ல வேண்டாம்… மொபைல் போனிலேயே சரிபார்க்கலாம்!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிய, அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கியுள்ள பிரத்யேக வசதியின் மூலம், உங்கள் மொபைல் போனிலிருந்தே ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மூலம் சரிபார்க்கலாம்.

1950 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது எப்படி?
உங்கள் மொபைலில் Message (SMS) பகுதியில் செல்லுங்கள்.

  • ECI  உங்கள் EPIC எண்
  • (உதாரணம்: ECI SXT000001) என டைப் செய்யுங்கள்.
  • இதனை 1950 என்ற எண்ணிற்கு அனுப்புங்கள்.

என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?
நீங்கள் எஸ்.எம்.எஸ் அனுப்பிய சில நொடிகளுக்குள், பதில் குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். அதில்,

  • உங்கள் பெயர்
  • வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் (Serial Number)
  • பாகம் எண் (Part Number)
  • சட்டமன்ற தொகுதி (Constituency)
  • போன்ற முக்கிய விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

(“Sir/Ma’am, you are kindly requested to contact your BLO or visit https://voters.eci.gov.in for your EPIC details, ECI.”
என்ற SMS வரும்). 

ஒருவேளை பதில் தகவல் வரவில்லையெனில், அல்லது உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்தால், உடனடியாக: இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகியும் முறையிட்டு திருத்தம் செய்யலாம்.

வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை இன்றே சரிபார்த்து, உங்கள் வாக்குரிமையை பாதுகாப்பது உங்கள் கடமை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒருபோதும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது – ராமதாஸ்

MUST READ