கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) மாலை திறந்து வைக்கவுள்ளார். அந்த நூலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
மதுரையில் 2,13,338 சதுரஅடியில் 6 தளங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நூலகத்தில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி நூல்களுக்கு தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.
போட்டி தேர்வுகளுக்காக பல தலைப்புகளில் சுமார் 30,000 புத்தகங்களை கொண்ட தனிப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நூலகம், அறிவியல் கருவிகள், கலைஞர் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பிரிவுகள் உள்ளன. அதேபோல், கலைக்கூடம், மாற்றுத்திறனாளிப் பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வு அறை போன்ற வசதிகள் உள்ளன.
‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!
இந்த நூலகத் திறப்பு விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.