Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

கலைஞரின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள்: மெரினா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மெரினால் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மெரினாவில் உள்ள கலைஞர் நினைவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூவி மரியாதை செலுத்தினார்.

 

முன்னதாக கலைஞர் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழவுகளில் திமுக எம்.பி., கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ