Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 30 பேர் கவலைக்கிடம்!

-

- Advertisement -
kadalkanni

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். நேற்று காலை வரையில் 29 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை வரை 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 156 பேர் என்றும் அதில் உயிரிழந்தவர்கள் 49 பேர் எனவும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பலருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

MUST READ