spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் - கமல்ஹாசன்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் – கமல்ஹாசன்!

-

- Advertisement -

குவைத் தீ விபத்து - 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், குவைத் நாட்டின் மங்கஃப் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கொடிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய் நாட்டுக்குக் கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ