Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக உடன் கூட்டணியா? கமல் பதில்

திமுக உடன் கூட்டணியா? கமல் பதில்

-

- Advertisement -

கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

Image

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் நடக்கும் புகைப்படக் கண்காட்சியை ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல்ஹாசன் பார்வையிட்டார்.

we-r-hiring

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். முதலமைச்சரின் உயர்வை படம் பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம். அரசியலை தாண்டி, எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நட்பு உள்ளது,கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. மு.க.ஸ்டாலினுக்கும் எனக்குமான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவருமே நிரூபித்து கொண்டிருக்கிறோம். முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைஞர் மகன் ஸ்டாலின் என்று இருந்த காலத்தில் இருந்து தமக்கு ஸ்டாலினை நன்றாக தெரியும். ஒரு மாபெரும் தலைவரின் மகனாக மு.க.ஸ்டாலின் இருப்பதில் சந்தோஷம் உண்டு என்றாலும் அதில் சவால்களும் நிறைய உண்டு. சவால்களை ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் ஸ்டாலின். ” என புகழாரம் சூட்டினார்.

MUST READ