காஞ்சி: 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணிநிறுத்தம்
காஞ்சிபுரம் அடுத்த வனத்தோட்டம் பகுதியில் உள்ள 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். அதேபோல, காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வனத்தோட்டம் பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணி நிறுத்தப்பட்டுளது. பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வு மேற்கொண்டு மறு உத்தரவு வந்தபின் பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.