Homeசெய்திகள்தமிழ்நாடுகொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு

-

- Advertisement -

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விலை சரிவு

கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு விலை சரிவுகொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நல்ல விளைச்சல் இருந்தும் விலை கிடைக்காததால் வருத்தம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளையும் காய்கறிகளுக்கு மருத்துவ குணம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. பருவத்திற்கு ஏற்றார் போல கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், பீட்ரூட் என பலவகை காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் அவற்றை தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

ஒரு கிலோ ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்வதால் கவலை

இந்தநிலையில் பல்வேறு மலைக் கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அமோகமாக இருந்தாலும், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு கிலோ உருளைக் கிழங்கு 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

MUST READ