spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுமரி அருகே மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

குமரி அருகே மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆற்றில் மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தவர் திடீரென வந்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் தனது மாடுகளை அருகில் உள்ள ஆற்றில் சுத்தம் செய்து கரையேற்றி விட்டு தான் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினார். அந்த நேரம் திடீரென ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த காட்டாற்று வெள்ளமானது ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த மணிகண்டனை இழுத்து சென்றது. மணிகண்டன் காட்டாற்று வெள்ளத்தில் மாயமானது தொடர்பாக அப்பகுதி மக்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மணிகண்டனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இதனிடையே இரவு நேரம் என்பதால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் தீயணைப்பு துறை வீரர்கள் தங்கள் தேடுதல் பணியை தொடர்ந்தனர். சுமார் இருபது மணி நேர தேடுதலுக்கு பிறகு காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட மணிகண்டன் அப்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

MUST READ