Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவை தொகுதி மறுசீரமைப்பு  தமிழ்நாட்டிற்கான தண்டனை! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு  தமிழ்நாட்டிற்கான தண்டனை! தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டிற்கான தண்டனை என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமோ அல்லது புதிய மக்கள் தொகையை ஒரு முக்கிய அளவுகோலாக கொண்டு நிகழ்த்தப்படும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறையும் ஆபத்து உள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுளாக தனது மக்கள் தொகை வளர்ச்சியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி  வேறு இல்லை என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

Parliament

தென் மாநிலங்களூக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும் என்றும் தவெக தலைவர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.  தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போதே அனைத்து உறுப்பினர்களுக்கு கேள்வி நேரங்களில் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ள அவர், இத்தகைய சூழ்நிலையில் மேலும் உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டு அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வெறும் அலங்கார பொம்மைகளாக இருப்பதில் என்ன  பலன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற செயல்பாடுகளில் சீர்திருத்தம் கொண்டுவராமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதன் வாயிலாக மட்டும் எந்த பலனும் இல்லை என்றும் தவெக தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் சட்டத்தை திருத்தி அமைத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தற்போது ஒதுக்கப்பட்ட தொகுதகளின்  எண்ணிக்கையில் மாற்றம் இன்றி அது கால வரையின்றி நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ